×

கேரளா அரசு - ஆளுநர் கான் இடையே உச்சகட்ட பனிப்போர்: வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்க சட்ட மசோதா.. மாநில அமைச்சரவை ஒப்புதல்..!!

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், பினராயி விஜயன் அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் பறிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் தொடர்பாக கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பணிப்போர் வலுத்து வருகிறது. ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்று கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வி. கோவிந்தன் கூறியிருந்தார். இந்நிலையில் மாநில ஆளுநருக்கு மாற்றாக உயர்கல்வித்துறை நிபுணர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டத்தை கேரளா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மசோதா ஒப்புதலுக்காக விரைவில் ஆளுநர் ஆரிப் கானுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை அகற்றுவதற்கான அவசர சட்ட மசோதா, சட்டமாக மாற ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒப்புதல் வேண்டும் என்பதால் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு இல்லை.


Tags : Kerala Government ,Cold War ,Governor Khan ,Chandee ,Governor State Cabinet , Kerala Government, Governor Khan, Chancellor, Bill
× RELATED அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!