×

மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை

சென்னை: மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட என்எல்சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், அதன் வளர்ச்சிக்கு காரணமான மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு மாற்றாக அவர்களை சுரண்டி வருவதை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு வாங்கத் துடிக்கும் என்.எல்.சி நிறுவனம், நிலங்களை வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்குக் கூட தயாராக இல்லை. அதனால் தான் என்.எல்.சி  சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கடலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி நிறுவனம் மறுக்கிறது. இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4-ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் இதை மீண்டும் தெரிவித்த நான், என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினேன். என்.எல்.சி நிறுவனத்தின் சுரண்டலில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Tags : NLC ,Tamil Nadu ,K. ,Chairman Anmani , People's Faith, NLC Institute, BMC President Anbumani, statement
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...