×

எப்ஆர்எஸ் கேமரா பயன்படுத்தி 3,275 பேரிடம் போலீஸ் விசாரணை: தலைமறைவு குற்றவாளிகள் 13 பேர் கைது

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கையின்போது 3,275 பேரை போலீசார் எஸ்ஆர்எஸ் கேமரா மூலம் ஒப்பிட்டு விசாரணை நடத்தினர். அதில் தலைமறைவாக இருந்த 13 குற்றவாளிகளை போலீசார் கைது ெசய்தனர். சென்னையில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல் மற்றும் சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் 5,640 வாகனங்கள் தணிக்கை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 100 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர, சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள், தலைமறைவு குற்றவாளிகளை  அடையாளம் காணும் வகையில் போலீசார் முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் (எப்ஆர்எஸ்) கேமரா மூலம் 3,275 நபர்களிடம் சோதனை நடத்தினர். அதில், தலைமறைவாக இருந்த 9 குற்றவாளிகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 நபர்கள்  என மொத்தம் 13 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : FRS , FRS camera, police investigation, absconding criminals,
× RELATED தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்க...