கிடங்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிகளவு பதிவு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு விருது: டெல்லி நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

சென்னை: கிடங்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிக பதிவு செய்த தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான விருது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதன் இயக்குனர் வழங்கினார். தமிழ்நாட்டில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதிலிருந்து தவிர்த்திடவும், சேமிப்பு இழப்புகளின்றி பாதுகாத்திடவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலமாக 100 மெ.டன், 500 மெ.டன், 1000 மெட்ரிக் டன் மற்றும் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4044 கிடங்குகள், 5,47,100 மெ.டன் கொள்ளளவுடனும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மூலமாக 59 சேமிப்பு கிடங்குகள் 7.70 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுடனும் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாய உறுப்பினர்கள் பயனடையும் வகையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நேர்மறை மதிப்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் 1062 கிடங்குகளும் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான 58 கிடங்குகளும், இந்திய அரசின் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களிடையே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான கிடங்குகள் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறு மற்றும் குறு விவசாயிகள் 7 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் தானிய ஈட்டுக் கடன் பெறும் வகையில் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தேசிய அளவில் விற்பனை செய்வதற்கும், சிறந்த விலை பெறுவதற்கும், குறைந்த வட்டி விகிதத்தில் தானிய ஈட்டுக் கடன் பெறுவதற்கும் உதவும். இதனை பாராட்டி டெல்லியில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தோற்று விக்கப்பட்ட நாள் விழாவின் போது அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகளை ஆணையத்தில் பதிவு செய்ததற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மாநிலத்துடையேயும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் அதிக சேமிப்புக் கிடங்குகளை பதிவு செய்ததில் முதன்மையாக இருந்தமைக்கு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சிவஞானம், விருது வழங்கி ஆணையத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

Related Stories: