தீபாவளி விடுமுறை முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறையவில்லை: உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறையவில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை கடந்த 24ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஊடட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த சனிக்கிழமை முதல் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாகே காணப்படுகிறது. ஊட்டியில் நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: