மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த விவகாரம்; 10 நாட்கள் பின் தொடர்ந்து திட்டமிட்டு கொலை செய்தேன்: சிபிசிஐடி போலீசாரிடம் காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: என்னை காதலித்து வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், திட்டமிட்டு 10 நாட்கள் பின் தொடர்ந்து கொலை செய்தேன் என்று காதலன் சதீஷ் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சத்யா(20), கடந்த 13ம் தேதி மதியம் தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த காதலன் சதீஷ் தன்னை காதலிக்க வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை, அப்போது கடற்கரை நோக்கி வந்த ரயில் முன்பு சதீஷ் தள்ளி கொடூரமாக கொலை செய்தார்.

இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சதீஷை அதிரடியாக கைது செய்து வரு்ம 28ம் தேதி வரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில் பல்ேவறு குழப்பங்கள் நீடித்ததால், ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மேற்படி கொலை வழக்கில் சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், செய்தி தாள்களுக்கு தகவல் கொடுத்த நபர்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் இச்சம்பவம் தொடர்பாக, தகவல் சொல்ல விரும்பும் நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 1 நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து காதலன் சதீஷை நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இரவே கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு காதலன் சதீஷை அழைத்தனர். பிறகு மாணவியை கொலை செய்தது எப்படி என்று சதீஷ் நடித்து காட்டினார். அதை சிபிசிஐடி போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

பிறகு சதீஷிடம் நடத்திய விசாரணையில்,‘ தன்னை காதலித்து என்னுடன் பல இடங்களில் சுற்றி விட்டு, பெற்றோர் கூறியதால் என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், நான் திட்டமிட்டு 10 நாட்கள் பின் தொடர்ந்து சத்யாவை கொலை ெசய்தேன். சம்பவத்தன்று நான் கொலை செய்யும் நோக்கில் வந்தேன். இருந்தாலும், கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நான், எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறி அவரிடம் கெஞ்சினேன். ஆனால் என்னை சத்யா உதாசீனப்படுத்தினார். பிறகு நான் திட்டமிட்டப்படி ரயில் நிலையத்திற்குள் வரும் போது, சத்யாவை தள்ளி கொலை செய்தேன்’.இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஒரு நாள் காவல் முடிந்து நேற்று இரவு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீசார் மீண்டும் சதீஷை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: