×

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அஃப்சர்கான் என்பவரை இரவோடு இரவாக கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். வழக்கில் திடீர் திருப்பமாக 6-வது நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். கோவையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்ககூடிய நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினின் உறவினர் அஃப்சர் கான் என்பவர் 6-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோவை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு முபின் என்பவர் உயிரிழந்தார். அதன் அடிப்படையில் ஏராளமான தடய அறிவியல் ஆய்வினர் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள 9 தனிப்படைகள் ஈடுப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் பல்வேறு சோதனைகளை நடத்தினர். அதில் 5 பேரை கைது செய்து காவலில் உள்ளனர். விசாரணையில் அடிப்படையில் தற்போது 6-வது நபராக முபினின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை என்பது முபினின் வீட்டில் உள்ள வேதிப்பொருட்கள் எங்கு இருந்து வந்தது, அந்த பொருட்கள் யார் வாங்கினார்கள், இது போன்ற அசம்பாவிதங்கள் பின்னனியில் தயாரிப்புக்கு பயன்படுத்த பல்வேறு விதமான விடயங்களை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த வழக்கில் 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Khova , Another person arrested in Coimbatore car cylinder explosion case
× RELATED எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை,...