×

கொடைக்கானலில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேர் மீட்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் அருகே மலைக்கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூரில் நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த மலைக்கிராம மக்கள் செல்லும் சாலையில் உள்ள கல்லாறு ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சின்னூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெரியகுளம் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பினர். அப்போது, இந்த காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் நாகராஜ், கண்ணன், கணேசன் உட்பட 4 பேர் சிக்கி உயிருக்கு போராடினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 4 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

The post கொடைக்கானலில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Chinnoor ,Periyur ,Kallar river ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் குரூப் 1, 1ஏ...