×

கேரள ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 துணை வேந்தர்கள் பதவியில் தொடர கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 துணை வேந்தர்கள் பதவியில் தொடர கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) விதிகளை மீறி நியமிக்கப்பட்ட கேரளாவிலுள்ள 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கவர்னருக்கு பல புகார்கள் சென்றன.  அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ததை தொடர்ந்து கவர்னர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 துணை தேந்தர்கள் பதவியில் தொடர கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் நேற்று கூறியிருந்தார்

9 துணை வேந்தர்களை பதவி விலக கெடு விதித்த கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவு எதிர்ப்பு தொடரப்பட்ட வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.ஆளுநரின் உத்தரவை எதிர்த்து 9 பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். 9 துணை வேந்தர்கள் பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டிருந்தார். துணை வேந்தர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து அதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை துணை வேந்தர்கள் பதவியில் நீடிக்கலாம்.


Tags : Kerala High Court ,Governor of Kerala , Kerala High Court allows 9 Vice-Chancellors to continue in office till Kerala Governor issues final order
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர்...