சாமி கும்பிட விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி பரிதாப பலி

தாம்பரம்: சாமி கும்பிட விளக்கு ஏற்றியபோது புடவையில் தீப்பிடித்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாதன், இவரது மனைவி சாந்தா (72). தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால், வீட்டில் கனவன் - மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை சாந்தா வீட்டின் பூஜை அறையில் சாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த சாந்தாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: