×

ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவமனையில் மூலிகை மரம் நடப்பட்டது

தாம்பரம்: தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் அக்டோபர் 23ம்தேதி, 7வது ஆயுஷ் மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 6 வாரங்களாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் நடத்தி வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக விளங்கும் சித்த மருத்துவத்தின் தினம் அகத்தியர் பிறந்த நாளான மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாளன்று கடந்த 5 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் 9ம்தேதி சித்த மருத்துவ தினம் வருகிறது. இந்நிலையில், ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தாம்பரம் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர் கனகவல்லி மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி மூலிகை மரம் நட்டனர்.

Tags : Siddha Hospital ,Ayurveda Day , A herbal tree was planted at Siddha Hospital on the occasion of Ayurveda Day
× RELATED ‘கோடையை இதமாக்க இயற்கையின் கொடைகள்...