×

ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் டெட் தேர்வு வினா, விடைகள் வெளியானது

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இணைய தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் விடைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தாள்1, தாள் 2 ஆகிய தேர்வுகள் கணினி வழியில் 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது.

தேர்வு எழுதியவர்கள் தமது வினாத்தாள் மற்றும் பதில் அளித்த விடைகளை  டிஆர்பி இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில்  வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் இணைய தளத்தில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு நடந்த தேதி, ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : TET ,Teacher Examination Board , TET exam questions and answers have been published on the website of the Teacher Examination Board
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...