
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலிகளை தாண்டி நீர் ஆக்ரோஷமாக கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் காரணமாக பேச்சிப்பாறை அணையில் நீர்வரத்து அதிகரித்து தனது அபாய அளவை எட்டியதையடுத்து அணையிலிருந்து முதற்கட்டமாக 4,000 கனஅடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் மழையின் அளவு சற்று குறைந்துள்ளதால், தற்பொழுது அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறையாததால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.