×

பாகிஸ்தான் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவும் டிரோன்: குர்தாஸ்பூர் அருகே பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் டிரோன் விமானத்தை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அதிகாலை 4.30 மணியளவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே இந்தியா பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவும் என்பது ஆளில்லா விமானத்தை கண்டு உடனடியாக சுதாரித்து கொண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன்னை நோக்கி சரமாரியாக 17 முறை துப்பாக்கியால் சுட்டனர்.  

குண்டுகள் துளைத்ததால் மேற்கொண்டு பறக்க முடியாமல் டிரோன் கீழே விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய டிரோன் விமானத்தை கைப்பற்றி சோதனை இட்டு வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தான் குர்தாஸ்பூர் எல்லையில் வான்வெளி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  


Tags : India ,Pakistan ,Gurdaspur , Pakistan, intruding, drone, Gurdaspur, shot down, gunned down
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...