×

மற்ற நாடுகளை விட இந்திய பொருளாதாரம் பலமாகவே இருக்கிறது: ஐஎம்எப் அதிகாரி தகவல்

வாஷிங்டன்: பல நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதி அதிகாரி தெரிவித்தார். கொரோனா காரணமாக உலகின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.கடந்த நிதிஆண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு நிதிஆண்டில் (2022-2023), பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்)நேற்று முன்தினம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐஎம்எப்பின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா சீனிவான்( ஆசியா,பசிபிக் பிரிவு )  நேற்று கூறுகையில்,‘‘உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் நாடுகளில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படும்.பணவீக்கம் கடுமையாக இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பாதிப்பு இருக்கும். ஆனால் இதர நாடுகளை ஒப்பிடும் போது  இந்திய பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது ’’ என்றார்.



Tags : IMF , Indian economy remains stronger than other countries: IMF official
× RELATED இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய...