×

இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரிக்கும்: IMF எச்சரிக்கை; இந்திய அரசு மறுப்பு

டெல்லி: இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. IMF சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அதிக நிதி தேவைபடும் என்பதால், நீண்டகால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. எனவே நிதியை புதிய திட்டங்களை கொண்டுவரவேண்டும் என இந்தியாவுக்கு IMF அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும் IMF வலியுறுத்தியுள்ளது.

ஆனால் IMF-ன் கருத்தை இந்தியா மறுத்துள்ளது. பெரும்பாலும் உள்நாட்டு நாணையத்திலேயே கடன்கள் பெறபட்டுள்ளதால் பெரும் அளவில் அபாயம் ஏற்படாது என சர்வதேச நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் கே.பி.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், ஒன்றிய, மாநில அரசுகளின் கடனுக்கான விகிதாச்சாரம் 2005-06-ல் 81 சதவிகிதமாக இருந்து பின்னர் 2021-22-ல் 84 சதவிகிதமாக அதிகரித்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2022-23-ல் இது 81 சதவிகிதமாக மீண்டும் குறைந்துள்ளதை அவர் சுட்டுகாட்டியுள்ளார்.

சர்வதேச நாணய மதிப்பை பொறுத்தவரை, இந்தியாவில் ரிசர்வங்கியின் தலையீடு அதிகமாக உள்ளது என்று IMF மற்றொறு கருத்தை கூறியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் கண்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள RBI, இதனால் நிலையற்ற தன்மையில் இருந்த ரூபாய் மதிப்பு stabilized arrangement என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே IMF-ன் கருத்து சரியானது அல்ல என RBI தெரிவித்துள்ளது.

The post இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரிக்கும்: IMF எச்சரிக்கை; இந்திய அரசு மறுப்பு appeared first on Dinakaran.

Tags : India ,IMF ,Government of India ,Delhi ,International Monetary Fund ,Indian government ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!