3டியில் கிரித்தி ஷெட்டி

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் டொவினோ தாமஸ் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். படத்துக்கு அஜயந்தே ரண்டம் மோஷனம் என தலைப்பு வைத்துள்ளனர். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால், இதில் மூன்று வேடங்களில் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். கதை, திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். இந்த படத்தை 3 டியில் உருவாகும் இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். யுஜிஎம் புரொடக்‌ஷன்சுடன் இணைந்து மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Stories: