×

தமாகா மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் கட்சியில் இருந்து விலகல்

சென்னை: தமாகா மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் கட்சியில் இருந்து திடீர் விலகினார்.  சென்னையில் ஜி.கே.வாசனுடன் நெருக்கமாக இருந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட தவைர் கொட்டிவாக்கம் முருகன் தமாகாவில் இருந்த விலகி ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பி வைத்தார். அதை ஜி.கே.வாசன் ஏற்றுக் கொண்டார்.  தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக இ.எஸ்.எஸ். ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய ராஜினாமா குறித்து கொட்டிவாக்கம் முருகன் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகி தமாகாவை தொடங்கினார். அக்கட்சி தொடங்கியதன் நோக்கம், குறிக்கோள் என எதையும் அவர் நிறைவேற்றவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்போம் எனக்கூறிய அவரது அரசியல் பாதை திசைமாறி விட்டது. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்தும் தகுதியான வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்காததாலும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு பெறாததாலும் தோல்வியை தழுவியது. மேலும் மாவட்ட தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமலும், சரியான உத்தியை கையாளதாலும் என்னை போன்ற மூப்பனாரின் விசுவாசிகளுக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது. இதனால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post தமாகா மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் கட்சியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Tamaka district ,president ,Kottivakkam Murugan ,Chennai ,Tamaga District ,South Chennai ,GK Vasan ,Dinakaran ,
× RELATED டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா