மாமல்லபுரம் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி புது மாப்பிள்ளை பலி

சென்னை: மாமல்லபுரம் கடலில் உறவினர்களோடு குளித்த புது மாப்பிள்ளை ராட்சத அலையில் சிக்கி பலியானர். காஞ்சிபுரம் எம்வி - எம்பி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது, மகன் பாபு (30).  தனியார் நிறுவன ஊழியரான பாபுவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. இந்நிலையில், நேற்று மாலை பாபு உறவினர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார்.

பின்னர் கடற்கரை கோயிலுக்கு அருகே கடலில் இறங்கி ஜாலியாக குளித்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை பாபுவை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது.  மீனவர்கள் சிலர் படகு மூலம் நடுக்கடலுக்கு சென்று தேடியும் பாபுவை மீட்க முடியவில்லை. பின்னர், சில மணி நேரத்தில் கடற்கரை கோயில் அருகே பாபுவின் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: