×

4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டம்..!!

டெல்லி: 4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை தயாரிக்கிறது.

ஜியோ மடிக்கணினிக்கான சிப்களை குவால்காமின் துணை நிறுவனமான ஆம்ஸ் வழங்க உள்ளது. ஜியோ மடிக்கணினியின் மைக்ரோ சாஃப்டின் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜியோ மடிக்கணினியை விநியோகிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் பொதுச்சந்தைக்கு ஜியோ மடிக்கணினி விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.


Tags : Mukesh Ambani ,Jio , 4G SIM Card, Laptop, Rs.15,000, Jio Company
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...