×

கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

 

காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் காரைக்கால் பகுதிகளில் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமசிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Tags : Karaikal ,Southeast ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...