×

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கம்

சென்னை: பண்டிகைகாலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கமளித்துள்ளார். தெற்கு ரயில்வே சார்பில் ‘யுவர் ப்ளாட்ஃபார்ம்’ என்ற  மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இதழின் முதல் பிரதியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆகியோர் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து சென்னை பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இந்த இதழ் விநியோகிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் பாரம்பரியம், கலாசார பெருமையை தெரிந்துகொள்ளும் விதமாக யுவர் பிளாட்ஃபார்ம் என்ற மாதந்திர இதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இதழ் ராஜ்தானி, சதாப்தி, டபுள் டெக்கர் போன்ற ரயில் பயணிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த இதழ் மூலம் பயணிகள் மற்றும் தெற்கு ரயில்வேக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். மேலும், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Southern Railway ,General Manager ,Mallya , Platform ticket fare hike to curb crowding during festive season: Southern Railway General Manager Mallya explains
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...