×

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன்: நடிகர் பார்த்திபன் பேட்டி

தஞ்சை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து, அதனை  சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :
 தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ சோழனுக்கு வணக்கம். பொன்னின் செல்வன் திரைப்படத்தை இந்த தஞ்சை மண்ணில் பார்ப்பது பெருமையாக நினைக்கிறேன். 1,973ல் மார்ச் 31ம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன்.

நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய் விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். எல்லா சினிமாவையும்  வரவேற்பது என்னுடைய பழக்கம். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வன் நடித்து, அதனை  சோழ தேசத்தில் வந்து பார்ப்பது பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்து உள்ளார்கள்.

ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்கள் தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்தனம் இயக்கத்திற்கு.

இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்ப்பதற்காக வரவில்லை, இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அதிகாலையிலேயே பார்த்த தஞ்சை ரசிகர்கள் படம் மிகப் பிரமாண்டமாக இருப்பதாகவும் சோழ தேசத்தில் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். உலகம் எங்கும் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ponny ,Parthiban Batti , Ponni's Selvan, visiting Chola Desam, actor Parthiban interview
× RELATED பாகுபலி இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இல்லை: மணிரத்னம் பேச்சு