×

உரிய விலை கிடைக்காததால் விரக்தி: செண்டுமல்லி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அதிக அளவிலான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மாவட்டத்தில் நெல், ராகி, தக்காளி, கரும்புக்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது சம்பங்கி, குண்டுமல்லி, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகைகள் மாவட்ட தேவைக்கும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு சில நேரங்களில் விலை கை கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதற்கான செலவினங்கள் மற்றும் நோய் தாக்குதலால் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

நாகாவதி அணை பகுதியில் வருடம் முழுவதும் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அங்கு விவசாயி ஒருவர்  அரை ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பயிரிட்டு இருந்தார்..செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்கும் நிலையில், விலை குறைந்துள்ளது. தற்போது சபமுகூர்த்தங்கள் எதுவும் இல்லாததால் உரிய விலை இன்றி மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை சரிந்துள்ளது.

மேலும்செண்டு மல்லி பூக்களை பறித்து விற்பனைக்கு அனுப்பும் கூலிக்கு கூட விலை போகவில்லை. ஒரு கிலோ 5ரூபாய் முதல் 10ரூபாய் வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் செண்டுமல்லி செடிகளை அழித்து மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்த விவசாயி, செண்டுமல்லிசெடிகளை  டிராக்டர் கொண்டு அழித்தார்.

பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு சில நேரத்தில் விலை ஏறுமுகத்தில் இருந்தாலும் மற்ற நேரங்களில் தொடர் சரிவால் அதிக அளவு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக காலத்திற்கு ஏற்ப பூக்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சரியான தருணத்தில் பயிரிட வேண்டும் என வேளாண் அதிகாரிகள்கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Sentumalli , Frustrated by not getting fair price: Farmer destroys sedumalli plants with tractor
× RELATED தொடர் மழையால் செடியிலே அழுகும் செண்டுமல்லி-விவசாயிகள் கவலை