×

நாளை மறுநாள் நாடு திரும்புகிறார் பாக். நிதியமைச்சராக இஷாக் நியமனம்?

இஸ்லாமாபாத்: நாளை மறுநாள் நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐநா பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், லண்டனில் உள்ள அவரது சகோதரர் நவாஸ் ஷெரிப்பை நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது, நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயிலின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்த நவாஸ், அவரது பதவிக்காலம் வரும் 18ம் தேதி உடன் முடிவடைய உள்ளதால், முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர்ரை மீண்டும் நிதியமைச்சராக்க ஷெபாசுக்கு ஆலோசனை வழங்கினார்.நவாஸ், ஷெபாஸ் நடத்திய இந்த ஆலோசனையின் போது முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் உடன் இருந்தார். நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் பதவி காலத்துக்கு பிறகு, அமைச்சரவை ஆலோசகராக தனது பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pak ,Ishaq , Pak will return to the country the day after tomorrow. Ishaq appointed as Finance Minister?
× RELATED பாக். டிரோன் அத்துமீறல்