மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து  வருகிறது. அதில் அதிகபட்சமாக மஞ்சளாறில் 40 மிமீ, செந்துறை, தலைஞாயிறு 30மிமீ, திருக்குவளை, திருவிடை மருதூர், அய்யம்பேட்டை, முகையூர் 20 மிமீ, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பெரம்பலூர், வேப்பூர், காட்டுமலையூர், கடலூர், லப்பைகுடிக்காடு, ஜெயங்கொண்டம், பரங்கிப்பேட்டை, கும்பகோணம் 10 மிமீ மழை பெய்துள்ளது.

மேலும், மேற்கு திசையில் இருந்து  வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: