×

எளாவூர் சோதனைச் சுவடியில் ரூ.25 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை நடந்தி வந்தனர். இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை, சென்னை, பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்து லாரி, கார், மினிவேன் ஆகிய வாகனங்களில் தினம் தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காய்கறி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு செல்லும். இதனை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டை, கஞ்சா, குட்கா பொருள் வருவதை தொடர்ந்து நேற்று போலீசார் வாகனங்கள், தனியார் மற்றும் அரசு  பேருந்துகளை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  நெல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் தனியார் பேருந்தை பொன்னேரி - கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுமந்தன், சப்இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒருவரிடம் சுமார் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை தீவிர விசாரணை நடத்தினர்.  இதில், சுமார் அவரிடம் ரூ.25 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கான உரிய ரசீது இல்லாத காரணத்தினால் இது ஹவாலா பணம் என போலீசார் சந்தேகத்தினர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரர் ராவ் (45)என்பது தெரியவந்தது.  

இது குறித்து மேலும் விசாரணை நடத்தியதில் இந்த பணம் அவருடைய ஓனர் மிளகாய் வியாபாரம் செய்து வருவதாகவும் இந்த பணத்தை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வாருங்கள் என கூறியதாக தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த போலீசார் உடனடியாக சென்னை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ரூ.25 லட்சம் பணத்தையும்  ஒப்படைத்தனர்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Elavoor checkpoint , Unaccounted cash of Rs 25 lakh seized at Elavoor checkpoint
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...