நடிகர் சூரி ஓட்டல்களில் வணிக வரித்துறை ரெய்டு: மதுரையில் பரபரப்பு

மதுரை: நடிகர் சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் வணிக வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதுரையில் நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான அம்மன் உணவகங்கள், காமராஜர் சாலை,  அரசு மருத்துவமனை, ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், ஒத்தக்கடை ஆகிய இடங்களில்  உள்ளன. நேற்று முன்தினம் இரவு வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென இந்த உணவகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவுப்பொருட்கள் கொள்முதலில் உரிய கணக்கு காட்டாமலும், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை  என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஓட்டல்களில் அதிகளவில்  மக்கள் கூட்டம் குவிவதாகவும், இங்கு விற்பனை செய்யப்படுபவைகளுக்கு முறையாக  ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்றும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, இந்த ஓட்டல்களின் தலைமை கிளையாக  செயல்படும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள அம்மன் உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு  வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல், மற்ற கிளைகளிலும்  சோதனை நடத்தினர். நேற்று காலையும் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய  ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  ஓட்டல் பொறுப்பாளர்களுக்கு வணிக வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

Related Stories: