×

மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு

மும்பை: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் அக்.1 முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நடப்பு சாம்பியன் வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 6 லீக் ஆட்டங்களில் விளையாடும். இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ  வெளியிட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மொத்தம் 15 பேர் கொண்ட அணியில் ஜெமீமா ரோட்ரிக்ஸ் மீண்டும்  இடம் பிடித்துள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் இங்கிலாந்து டூரில் பங்கேற்கவில்லை. மாற்று வீராங்கனைகளாக விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா, சிம்ரன் பகதூர் இடம் பிடித்துள்ளனர்.

* இந்தியா
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், எஸ்.மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினேஹ் ராணா, ஹேமலதா தயாளன், மேக்னா சிங், ரேணுகா சிங், பூஜா வஸ்த்ராகர், ரஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கிரண் நவ்கிரே.

Tags : Women's Asia Cup T20 ,India Team , Women's Asia Cup T20 India Team Announcement
× RELATED மகளிர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு