×

மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்தியா ஹாட்ரிக் வெற்றி

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. ராங்கிரி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் ஹர்மான்பிரீத், பூஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், மந்தனா தலைமையேற்றார். ஷபாலி – ஹேமலதா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 122 ரன் சேர்த்தது. ஹேமலதா 47 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி 81 ரன் (48 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மகர் பந்துவீச்சில் அவுட்டாகினர். சஜனா 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ஜெமிமா 28 ரன் (15 பந்து, 5 பவுண்டரி), ரிச்சா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நேபாளம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து, 82 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மகர் 18, பிந்து 17*, ரூபினா 15, இந்து 14 ரன் எடுக்க, சக வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஏ பிரிவில் இந்தியா (6), பாகிஸ்தான் (4) அரையிறுதிக்கு முன்னேறின.

The post மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்தியா ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's Asia Cup T20 India ,Dambulla ,India ,Nepal ,Women's Asia Cup T20I ,Rangiri Arena ,Women's Asia Cup T20 ,Hattrick ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்