ஆலந்தூர் சாலையோர கடைகளின் விளம்பர போர்டுகள் அகற்றம்

ஆலந்தூர்: ஆலந்தூரில் சாலையோர கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் ேநற்று அகற்றப்பட்டன. ஆலந்தூர் எம்கேஎன் சாலையில் உள்ள  கடைகளின் முகப்பில் உள்ள விளம்பர போர்டுகளால் வாகனங்கள் செல்லும்போது இடையூறு ஏற்படுவதாக நெடுஞ்சாலை துறையிருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சாலையோர கடைகளின் முன்னால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான விளம்பர போர்டுகள் பொக்லைன் மூலம் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. அதேபோல், ஆலந்தூர் எம்கேஎன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் கான்கிரீட் தளத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் உடனடியாக அப்புறப்படுத்த கெடு விதிக்கப்பட்டது. இதுபோன்று, ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: