×

உலக டாங்கோ நடனப்போட்டி.. இரண்டு பிரிவுகளிலும் வெற்றியை தனதாகியது அர்ஜெண்டினா..!!

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினாவில் நடைபெற்ற உலக டாங்கோ நடனப்போட்டியின் இரண்டு பிரிவுகளில் அந்நாட்டு நடன கலைஞர்களே வெற்றி பெற்றனர். தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்று வந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து டாங்கோ நடன கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை அரங்கேற்றினர். நகரின் முக்கிய இடங்களில் மேடை அமைத்து  நடன அரங்குகளில் நடந்த போட்டிகளை ஏராளமானவர்கள் திரண்டு ரசித்தனர். குழுவாகவும், இணையாகவும் ஆடிய நடன கலைஞர்களில் இருந்து இறுதிச்சுற்றுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் பாட்டுகோனியா நகரை சேர்ந்த செபாஸ்டியன்- சிந்தியா இணை தங்களது அற்புதமான ஆட்டத்தால் முதல் பரிசை தட்டிச் சென்றது. மற்றொரு பிரிவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் நடனத்திறமையால் பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் அர்ஜென்டினாவின் ஃபெர்காமினோ நகரைச் சேர்ந்த ரெகார்ட்னோ- காஸ்டன்சா இணை அற்புதமாக சுழன்று ஆடி வெற்றியை தங்கள் பக்கம் இழுத்தனர். இந்த ஆண்டு நடைபெற்ற டாங்கோ நடனபோட்டிகளை நகரின் ஒரு மையத்தில் மட்டும் 20,000பேர் கண்டு ரசித்ததாக அர்ஜெண்டினா கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் நீங்கியதை அடுத்து இந்த ஆண்டு உலக டாங்கோ நடனப்போட்டியை பார்வையாளர்கள் எந்தவித தடையுமின்றி ரசித்தனர். கடந்த ஆண்டு வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் வீடியோ செயலி மூலமாகவே போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்த்தக்கது.


Tags : World Tango Dance Competition ,Argentina , Tango, Dance Competition, Two Division, Victory, Argentina
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்