×

செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்

பிராகா: செக் குடியரசு நாட்டில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் 4பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். படுபைஸ் என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது. பயணிகளின் ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த விபத்தில் 4பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 26பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Cargo ,Czech Republic ,Prague ,Padubais ,Dinakaran ,
× RELATED செக் குடியரசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி