×

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

பூந்தமல்லி: பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. பூந்தமல்லி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், க.பத்மாவதி கண்ணன், லோ.ஜெயஸ்ரீ லோகநாதன், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, ச.உமாமகேஸ்வரி சங்கர், எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன், எஸ்.பிரியா செல்வம், பி.டில்லிகுமார், வி.கன்னியப்பன், சு.சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 1.66 கோடி நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மணம்பேடு 7-வது வார்டு பகுதியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளது. அந்த கட்டடம் தற்போது மூடப்பட்டு, அருகில் உள்ள கட்டடத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் சத்தியப்பிரியா கோரிக்கை விடுத்தார். இதற்கு பூவை எம்.ஜெயக்குமார்பதிலளிக்கையில், `ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Poontamalli , Poontamalli union committee meeting demands to repair dilapidated school building
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்