டிடிவி.தினகரன் எதிர்ப்பு நவீன யுகத்திலும் தீண்டாமையை ஏற்க முடியாது

சென்னை: நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை.

தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது. தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது என கூறப்பட்டுள்ளது. மற்றொரு டிவிட்: ‘சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவரும்,  அவர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவருமான ரெட்டைமலை  சீனிவாசனின் நினைவு நாள் இன்று. ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.

Related Stories: