×

கொரட்டூரில் 3வது வாரமாக களைகட்டியது வீதி திருவிழா: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

அம்பத்தூர்: கொரட்டூரில் நடைபெற்ற வீதி திருவிழா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சென்னையின் முக்கிய சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ எனப்படும் வீதி திருவிழா சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி கொரட்டூர் பகுதியில் கடந்த 2 வாரங்கள் இந்த வீதி திருவிழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து, 3வது வாரமாக கொரட்டூர் காவல் நிலைய சாலையான கிழக்கு நிழற் சாலையில் நேற்று வீதி திருவிழா நடைபெற்றது.

போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகிழ்ச்சி எங்கள் வீட்டின் அருகில் என்ற தலைப்பில் இந்த திருவிழா நடைபெற்றது. காலை 6 மணி 9 மணி வரை நடைபெற்ற விழாவில் கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, சதுரங்கம், சைக்கிளிங், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல் தாய்ப்பாசம், சதுரங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன. மேலும், சிறுவர்கள் விளையாட ராட்சத பலூன்களால் தனி இடம் அமைக்கப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புது விதமான நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலவித இசை வாத்தியங்களுடன் வீதி முழுவதும் நடனமாடி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ந்தனர். பாரம்பரிய விளையாட்டுகள் சிறுவர்களை கவர்ந்தது,’’ என்றனர்.


Tags : Weeding ,festival ,Korattur , Weeding street festival in Korattur for 3rd week: Public participates enthusiastically
× RELATED இ பாஸ் நடைமுறையால் களையிழந்த சீசன்;...