×

வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல்

 

தண்டையார்பேட்டை, மே 27: கொருக்குப்பேட்டையில் வாகன சோதனையின்போது, உரிய ஆவணம் இல்லாமல், மொபட்டில் எடுத்துச் சென்ற ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கொருக்குப்பேட்டை மண்ணப்ப முதலி தெருவில் நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை மடக்கி சோதனை செய்தபோது, அதில் இருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

அதற்குரிய ஆவணம் இல்லாததால், அவர்களிடம் இருந்த ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று, கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜ் விசாரணை செய்தபோது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் மால்குமார் (38) மற்றும் மனோஜ் குமார் (27) என்பதும், இவர்கள் தற்போது ஏழுகிணறு அம்மன் கோயில் தெருவில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இந்த பணத்தை யாரிடம் கொடுக்க வந்தார்கள் என்பது தெரியாததால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

The post வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Korukuppet ,Mannappa Mudali Street ,Dinakaran ,
× RELATED ஓடும் காரில் திடீர் தீவிபத்து