×

பிரபாஸ், தீபிகா படத்தில் ஹாலிவுட் ஆக்‌ஷன் டைரக்டர்கள்

ஐதராபாத்: பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தில் ஹாலிவுட் ஆக்‌ஷன் டைரக்டர்கள் பணியாற்றுகிறார்கள். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர் நாக் அஷ்வின். இவர் இயக்கும் படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் தயாராகி வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளில் படமாக்க உள்ளார்.

இதற்காக படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த ஆக்‌ஷன் இயக்குனர்கள் பணியாற்ற உள்ளனர். முக்கியமாக தோர், அவெஞ்சர்ஸ், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்களில் பணியாற்றிய ஆக்‌ஷன் டைரக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘இந்த படத்தின் ஆக்‌ஷனும் கிராபிக்சும் ஹாலிவுட் படங்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கும். படத்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன. அவையெல்லாம் ரசிகர்களுக்கு சரியான தீனியாக அமையும்’ என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags : Prabhas ,Deepika ,Hollywood , Prabhas, Deepika are Hollywood action directors in the film
× RELATED பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்காதது ஏன்? ராஜமவுலி புது பதில்