×

காஞ்சிபுரத்தில் காலை உணவு திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம்: தமிழக அரசின்  மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி இன்று துவக்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பட்டாள தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில்  காலை உணவு திட்டம் துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்து,  திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர்  எம்எல்ஏ, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்விழிக்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kancheepuram , Breakfast program started in Kancheepuram
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...