11 மில்லியன் பாலோயர்கள்; டிவிட்டரில் தனுஷ் சாதனை

சென்னை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு வெற்றியை கொடுத்தார் தனுஷ். பின்னர் ஹாலிவுட் பக்கமும் சென்றார். தி கிரே மேன் படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் டிவிட்டரில் தனுஷை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லயனை தொட்டிருக்கிறது. வேறு எந்த தமிழ் நடிகருக்கும் டிவிட்டரில் 11 மில்லியன் பாலோயர்கள் இல்லை.

கடந்த ஆண்டு 10 மில்லியன் பாலோயர்களை பெற்றார். இந்த ஆண்டு 11 மில்லியன் என சாதனை படைத்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தின் மெகா வெற்றியால் சந்தோஷமாக இருக்கும் தனுஷுக்கு அவரது ரசிகர்களுக்கும் டிவிட்டர் சாதனை இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

Related Stories: