×

ஆரோவில் பகுதியில் 16 பழங்கால பொருட்கள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

வானூர்: ஆரோவில் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகள், மரச்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்ட 16 புராதான பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் பகுதியில் தானா என்ற இடம் உள்ளது. இங்கு கிராம மக்களுடன், வெளிநாட்டினர் பலரும் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள ஒரு வீட்டில், கற்சிலை, பழமையான தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், உலோக பாத்திரங்கள் உள்ளிட்ட 16 பழங்கால பொருட்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மேற்கண்ட பொருட்கள் அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்து கும்பகோணத்திற்கு எடுத்து சென்றனர்.


Tags : Auroville ,Anti-Idol Smuggling Unit police , 16 antiquities seized in Auroville area: Anti-Idol Smuggling Unit police in action
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...