×

குழந்தை கடத்தல் கதையில் போலீசாரை உளவு பார்க்கும் அதர்வா

சென்னை: பிரமோத் பிலிம்ஸ், மிராக்கிள் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘ட்ரிக்கர்’. அதர்வா முரளி, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜிப் ரான் இசை அமைத்துள்ளார். சாம் ஆண்டன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் ஸ்ருதியிடம் ஆக்‌ஷன் கதையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். ஆனால், அவருக்கு அதிரடி ஆக்‌ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று தெரிந்த பிறகு ‘ட்ரிக்கர்’ கதையைச் சொன்னேன். முதலில் இப்படத்துக்கு ஒரு பட்ஜெட் நிர்ணயித்தோம். ஆனால், படப்பிடிப்பு நடந்தபோது கூடுதல் பட்ஜெட் தேவைப்படும் என்று தெரிந்தது.

அதுபற்றி கவலைப்படாத தயாரிப்பாளர், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொல்லி முழு சுதந்திரம் அளித்தார். குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை என்றாலும், யதார்த்த வாழ்க்கையில் எந்தளவுக்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்புடையதாக இருக்கிறது என்பதை உண்மைத்தன்மையுடன் சொல்லியிருக்கிறோம். இக்கதைக்காக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம். கடத்தப்படும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் பார்வையில் சொல்லியிருக்கிறோம். போலீஸ் துறையில் அண்டர்கவர் ஆபீசர் வேடத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார்.

அதாவது, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசாரை உளவு பார்க்கும் வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே நான் அவருடன் ‘100’ என்ற படத்தில் பணியாற்றியதால், இப்படத்தில் அவரை எப்படி கையாள்வது என்ற விஷயம் மிக எளிதாக இருந்தது. அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் கதையில் அப்பாவாக அருண் பாண்டியன், மகனாக அதர்வா முரளி நடித்தனர். யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம், வரும் 23ம் தேதி ரோமியோ பிக்சர்ஸ் மூலமாக ரிலீசாகிறது.


Tags : Atharva , Atharva spying on the police in a child abduction story
× RELATED ராஜேஷ் எம். இயக்கத்தில் அதர்வா, அதிதி