×

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு; 5 ஊழியர்கள் மயக்கம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு மக்கும் குப்பையை பதப்படுத்தி அரைக்கும் தனியார்  தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று திடீரென காற்றில் நச்சு வாயு கலந்தது. இதனால் சுற்று பகுதியில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெங்கடேசன் (26), ஸ்ரீராம் (32), ராமதாஸ் (57), ராமநாதன் (25), தர்மராஜ் (24) உள்ளிட் 5 பேரை நச்சுவாயு தாக்கியது. இதில் அவர்கள் மயக்கமடைந்தனர். இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சிப்காட் பகுதி மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிப்காட் போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Kummidipoondi , Toxic gas released from private factory near Kummidipoondi; 5 employees faint
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...