×

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வளாகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலக அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலக அறையை திறந்து வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து வார்டன்  அமைப்பானது 1977ம் ஆண்டு அரசாணை எண்-2268 உள்துறை தேதியிட்ட 10.08.1977 படி துவங்கப்பட்டது . இந்த அமைப்பில் பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் போன்ற பல்வேறு பின்னணியிலிருப்பவர்கள் உள்ளனர். இவர்கள் காவல்துறை ஆணையர் / கூடுதல் ஆணையாளர் போன்ற அதிகாரிகளால் நியமிக்கப்படுகிறார்கள்.

போக்குவரத்து வார்டன் அமைப்பிற்க்கு தலைமை போக்குவரத்து வார்டன் திரு.ஹரிஷ்.எல்.மேத்தா தலைமையில் (Chief Traffic Warden)  அவருக்கு உதவியாக நான்கு துணைபோக்குவரத்து வார்டன்கள், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒருவர் - வடக்கு, தெற்கு, கிழக்கு & மேற்கு. மண்டலங்கள் மேலும் வரம்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் கடமை திட்டமிடல் அலுவலர் மற்றும் கடமை திட்டமிடல் அலுவலர் ஆகியோரால் வழிநடத்தப்படுகின்றன.

சென்னையில் தற்போது 142 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். அவர்களில் 3 பெண்கள் உட்பட மேலும் 24 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். போக்குவரத்து வார்டன்கள் வார இறுதி நாட்களில் சரக அதிகாரிகளால் குறிப்பிடப்படும் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் வழக்கமான சாலை பாதுகாப்பு பணிகளை செய்கின்றனர். மேலும்  புத்தாண்டு, பண்டிகை காலங்கள், தேர்தல் பணி, அனைத்து விதமான வழிபாட்டு தலங்களின் விசேஷ நாட்களில்,முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் பொதுகூட்டங்களின் போதும் வாகன தணிக்கையின் போதும் பணிபுரிகின்றனர்.  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்  தணிக்கையின் போதும் காவல் துறைக்கு உதவி வருகிறார்கள்.

அமைப்பின் மற்றொரு முக்கியமான செயல்பாடு ROAD SAFETY PATROLS (RSP) ஆகும். RSP திட்டத்தின் கீழ் சுமார் 470 பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மேலும் 18,500 க்கும் மேற்பட்ட மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்படி பணியானது சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முறையாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் RSP கேடட்களுடன் இணைந்து போக்குவரத்து வார்டன்களால் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சாலை பாதுகாப்பு வாரத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதுவரை அவர்களுக்கு அலுவலக அறை இல்லை.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல்  கட்டிடத்தில்  இன்று  காவல்  ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் டிராபிக் வார்டன் அலுவலக அறையை கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து திரு.கபில் குமார் சரத்கர்,  இ.கா.ப. துணை ஆணையாளர் திரு.ஹர்ஷ் சிங், இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) மற்றும் திரு.அசீம் அகமது, துணை தலைமை போக்குவரத்து வார்டன் முன்னிலையில் திறந்து வைத்தார். போக்குவரத்து வார்டன் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த அலுவலக கட்டிடம் பெரிதும் உதவும்.


Tags : Chennai ,Traffic Warden ,Shankar Jiwal , Chennai Metropolitan Police Commissioner Premises Traffic Warden Office Room, Shankar Jiwal
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...