×

ஓணம் பண்டிகையின் உற்சாகக் கொண்டாட்டம்: கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ பூக்கோலமிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகம்

கோவை: கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் முதன்மையான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு படிக்கின்ற கேரள மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலமிட்டு, மாவலி மன்னர் வேடமணிந்து புறப்பட்டார். ஓணத்தை வரவேற்கும் விதமாக பெண்கள் திருவாதரை குழு நடனமாடியும், சென்னை மேளம் இசைத்தும், ஓணம் பாடல்கள் பாடியும் கொண்டாடினர்.

மாணவர் மன்றம் மூலமாக குழு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கேரளாவின் பாரம்பரிய உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ முகாமில் நடைபெற்ற ஓணம் பண்டிகை செண்தை மேளங்கள் முழங்க, ராணுவ வீரர்கள் பங்கேற்ற காலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இங்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பாரம்பரியமான செண்டை மேளம் முழங்க ராணுவ வீரர்களின் ஈட்டி, கம்பு, போர்வாள், களரி உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து செந்நடை மேளம் முழங்க கேரள ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான மாவலி மன்னர் மற்றும் வாமனன் நடனமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் இருக்கும் தனியார் மேல்நிலை பள்ளியில் ஓணம் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அத்தப்பூ கோலமிட்டும், சிறப்பு நடனங்கள் ஆடியும் வெகு விமர்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆசிரியர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். இதில் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அத்தப்பூ கோலம் கண்டு மகிழ்ந்தனர்.    


Tags : Onam Festival ,Afig Bhokolamitu , Onam festival, celebration, college, Athapoo Kolam
× RELATED பிளாக்கில் விற்ற டிக்கெட்டுக்கு...