முதல்வர் சட்டத்தின் ஆட்சியை நடத்துகிறார்: அமைச்சர் ரகுபதி பேச்சு

செனனை: ஏழைக்கும் சட்டம் எட்ட வேண்டும், மக்களுக்காகவே சட்டம் என்ற உணர்வில், சட்டத்தின் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார். சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது:தமிழகத்தில் கடும் நிதி  நெருக்கடி  இருக்கும் போதிலும், நீதித்துறைக்கு நெருக்கடி வரக்கூடாது  என்பதற்காக  சென்னை உயர்நீதிமன்ற மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ.430 கோடியை  முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஒதுக்கித் தந்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின்,  எண்ணங்களுடன் இணைந்து செயல்படுபவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி. ஏழைக்கும் சட்டம் எட்ட வேண்டும், மக்களுக்காகவே   சட்டம் என்ற உணர்வில், சட்டத்தின் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்   முதல்வர் மு.க.ஸ்டாலின். நவீன தமிழகத்தை உருவாக்குவதில் நீதித்துறையுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

Related Stories: