×

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் கோடைகால நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்

புதுக்கோட்டை, ஏப். 27: புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் அமைத்து உதவிட வேண்டும் என்று மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ்.ரகுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொளுத்தும் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்திட தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

கழகத் தலைவரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், வார்டுகள், ஊராட்சி, ஒன்றியங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தங்களில் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். இது தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழகச் செயலாளர் கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் இணைந்து செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் கோடைகால நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai South District ,Summer ,Pudukottai ,minister ,S. Raghupathi ,Raghupathi ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு