×

ராக்கெட்டில் மீண்டும் எரிபொருள் கசிவு ஆர்டெமிஸ் ஏவும் திட்டம்; 2-வது முறையாக தோல்வி

கேப் கார்னிவெல்:அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, முதல்முறையாக கடந்த 1969ம் ஆண்டு, ‘அப்போலோ’ விண்கலத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. தற்போது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது. இதற்காக, 322 அடி நீளமுள்ள ஆர்டெமிஸ்-I என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக இதை மனிதர்கள் இல்லாமல் நிலவுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இது வெற்றி பெற்றால், அடுத்த முயற்சியில் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில், இந்த ராக்கெட்டை கடந்த மாதம் 29ம் தேதி விண்ணில் செலுத்த முதல்முறையாக முயற்சி செய்யப்பட்டது.

ஆனால், ராக்கெட்டில் எரிபொருள் கசிந்ததால், இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த குளறுபடி நீக்கப்பட்டு, நேற்று மாலை மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால், நேற்றும் ராக்கெட்டில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்தது. அதை அடைப்பதற்கான முயற்சியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, ராக்கெட்டை ஏவும் திட்டம் 2வது முறையாக கைவிடப்பட்டது.



Tags : Artemis , Refueling on rocket Artemis launch program; Failed for the 2nd time
× RELATED நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில்...