×

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த விவகாரம்: பெண் வக்கீலின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் காவலர்களுடன் வக்கீல் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், வக்கீல் தனுஜா மற்றும் அவரது மகள் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையடுத்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.  இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. பார்கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தவறு செய்யும் வக்கீல்கள் மீது வக்கீல்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்கள் இல்லாமல் தானாக முன்வந்து தவறு செய்யும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் வக்கீல் தனுஜாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரது மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்….

The post போலீசாரிடம் வாக்குவாதம் செய்த விவகாரம்: பெண் வக்கீலின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Dhanuja Rajan ,Chennai Chetupatti signal ,Dinakaran ,
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது