×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.105 கோடியில் 18 கோயில்களில் புதிய திட்ட கட்டுமானப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 கோயில்களில் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப்பணிகளுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்டம், மீனாட்சி சுந்ததேஸ்வரர் கோயிலில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர் கோயில், கள்ளழகர் கோயிலில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம், காதுகுத்தும் மண்டபம் மற்றும் முடிக்காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள், மதுரை மாவட்டம், வேங்கடசமுத்திரம், காட்டு பத்திரகாளியம்மன் கோயிலில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி,சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகள், சென்னை, ஏகாம்பரேசுவரர் கோயிலில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள், சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி,

சென்னை, கோடம்பாக்கம், பரத்வாஜேஸ்வரர் கோயில் சார்பில் அஞ்சுகம் துவக்கப் பள்ளியில் ரூ.1.72 கோடியில் புதிதாக உணவருந்தும் கூடம் மற்றும் கலையரங்கம் கட்டும் பணிகள்,சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் பேயாழ்வார் கோயில் தெருவில் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகள், ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள், ரூ.2.46 கோடியில் அய்யாப்பிள்ளை தெரு மற்றும் முத்துகாளத்தி தெரு ஆகிய இடங்களில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம், திருநீர்மலை, ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் ரூ.1.90 கோடியில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி,

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை, நித்தியகல்யாண பெருமாள் கோயிலில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம், மாரியம்மன் கோயிலில் ரூ.2.78 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி, சேலம் மாவட்டம், அம்பலவாண சுவாமி கோயிலில் ரூ.3.65 கோடியில் ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, மாரியம்மன் கோயிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி, விருதுநகர் மாவட்டம், தேவதானம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் திருக்குள திருப்பணி, விருதுநகர் மாவட்டம், மாவூத்து, உதயகிரிநாதசுவாமி கோயிலில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் திருக்குள திருப்பணி,

தென்காசி மாவட்டம், குற்றாலம், பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் நடைபாதை தளம் அமைக்கும் பணி, திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.105 கோடியிலான கோயில்களின் புதிய திட்ட பணிகளுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Hindu Religious Endowments Department ,Chief Minister ,M.K.Stalin. , 105 Crore Rs 105 Crore Project Construction Work in 18 Temples by Hindu Religious Endowment Department: Chief Minister M.K.Stalin Inaugurated
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...